லீணா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும்!

லிணா மணிமேகலை மீது இந்த மக்கள் கட்சிக்காரர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார், லிணா மணிமேகலை இலக்கியம் என்ற பேரில் ஆபாசத்தை எழுதுவதாகவும் இலக்கியம் என்ற போர்வையில் உடலுறவு நிகழ்வுகளையும் அந்தரங்க உறுப்புக்களையும் பற்றி எழுதுவதாவும் அவர் மீது இ.பி.கோ 292,293 படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்திருகிறார்.


இதுபற்றி ஜீனியர்விகடன் 24.3.10 இதழில் செய்தி வந்துள்ளது, இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவசியம் நடவடிக்கை எடுக்கவேண்டும். லீணா மணிமேகலையை இந்தப்பிரிவுகளில் அவசியம் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும். அப்படி ஒரு முன்மாதிரி நடவடிக்கை நடக்க வேண்டும். அப்போது தான் இதே பிரிவுகளின்படி இந்துமதத்தின் அனைத்து தலைவர்களையும் அனைத்து பக்தி இலக்கிய ஆசிரியர்களையும் இதே பிரிவில் உள்ளே தள்ள வாய்ப்பு உருவாகும்.

ஆணும் ஆணும் இணைந்து கூடி உறவு கொண்டு அய்யப்பன் உருவாணான் என்று ஒரு கதையை எழுதி அதை கோடிக்கணக்கான மக்களை நம்பவைத்த ஆபாசமோசடிக்காக அந்தக் கதையக் கௌப்பிவிட்ட பார்ப்பனர்களையும், அந்தக் கதையை இன்றும் பரப்பிவரும் குருசாமி மற்றும் கன்னி சாமிகளயும் அத வைத்துப் ஈனப் பொழப்புப் பொழைக்கும் மலையாள பார்ப்பனர்களான மேல்சாந்தி கீழ்சாந்திகளையும் உள்ளே தூக்கிப் போடமுடியும்.

பிட்டம் ரெண்டையும் பெருவேல் காக்க, வட்டக் குதையை வடிவேல் காக்க என அனைத்து அந்தரங்க உறுப்புக்களையும் குறித்து கந்த சஸ்டி கவசம் என்று பாடல் எழுதி பாடி அதை எல்லா இந்துக்களின் வீடுகளிலும் விடிகாலையில் ஒலிக்கச்செய்து கொண்டிருக்கும் முருகன் அடியார்களையும், பழனி வடபழனி பார்ப்பனப் பண்டாரங்களையும், கந்த சஸ்டி கவசம் அச்சிட்டு வெளியிடும் பதிப்பகத்தினரையும், அதை விற்பனை செய்யும் கடைக்காரர்களையும் கம்பி எண்ண வைக்க முடியும்.


குதிரைக்கு பிறந்த இராமனைப் பற்றியும், குதிரையை த்சரதனின் மனைவிமேல் ஏற்றி இராமனைப் பெற்றெடுத்த ஆபாச சம்பவத்தை பற்றியும், அறுபது ஆயிரம் பெண்களுடன் தசரதன் கூத்தடித்த க்ருப் செக்ஸ் பற்றியும் இராமன் இல்லாத நேரத்தில் கொழுந்தன் இலட்சுமணனை இழுத்த சீதையைப் பற்றியும், பேசாமல் போய்க்கொண்டிருந்த இராவணனை மயக்கி தனது ஒவ்வொரு உறுப்புகளையும் தனித்தனியே காட்டி விளக்கி மயக்கி அவனுடன் ஓடிப்போன சீதையைப் பற்றியும் இராமாயணம் என்ற பெயரில் ஒரு ஆபாசக்கதையை எழுதிய வால்மீகி முதற்கொண்டு கம்பன் மற்றும் இராஜாஜி வரையிலான அனைவர் மீதும் இ.பி.கோ 292, 293 பிரிவுகளில் வழக்குப்


பதிவு செய்யவேண்டும். இராமாயண்ம் என்ற ஆபாசக்களஞ்சியத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆண்டுகூட இராமலீலா நடத்திய சோனியா காந்தியை உள்ளே போட வேண்டும்.

அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று ஐந்து ஆண்களை வைத்துக்கொண்டிருந்த பாஞ்சாலிக் கதையான மகாபாரதத்தை எழுதியவர்களையும் இவற்றை இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களாக நமக்குக் காட்டிய சங்கரமடங்களையும் இந்திய அரசாங்கங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்,


பெண்களின் அந்தரங்கத்தில் தன் தும்பிக்கையை வைத்து உறிஞ்சும் காட்சியை சிலையாக வைத்திருக்கும் கோயில்களை இடித்துத் தரை மட்டமாக்க வேண்டும். இப்படி ஒரு காட்சியை சட்டசபயில் தலைவர் கலைஞரே புகைப்பட ஆதாரமாக வெளியிட்டார், அப்படி பெண்குறிக்குள் தும்பிக்கையை வைத்து உறிஞ்சும் விநாயகனையும் அந்தக் கதையைப் பரப்பும் பார்ப்பனர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும்,

சிவனும் பார்வதியும் ஆண்டுக்கணக்கில் புணர்ந்து அதனால் வெளிப்பட்ட விந்துவை பொதுமக்கள் பயன்படுத்தும் ஆற்றில் விட்டானாம் சிவன். அத ஆறு பெண்கள் குடித்தார்களாம். அதனால் ஆறுமுகன் பிறந்தானாம். இப்படி ஒரு ஆபாசக்கதயை எழுதி வெளியிட்டு பரப்பிய பார்ப்பனர்களையும். அந்தக் கதையை அடிப்படையாக வைத்து கோடிக்கணக்கான மக்களை முட்டாளாக்கி விந்துகுடித்ததால் பிறந்தவனை இன்றும் வணங்கிவரும் மக்களையும் அவனை வழிபட விடுமுறை விடும் அரசையும் குற்றவாளிகளாக்க வேண்டும்.


பெருமாளை நினைத்து உருகி படு விக்கிரமான செக்ஸ்பாடல்களை எழுதிய ஆண்டாள் திருப்பாவையை தடை செய்ய வேண்டும். அந்தப் பாடல்களை மார்கழி மாதத்தில் அதிகாலையில் தெருவில் பொது இடமான கோவில் தெருக்களிலும் பாடிக்கொண்டு அலையும் மாமிகளைக் கைது செய்ய வேண்டும்,.


ஒரு லீணா மணிமேகலையால் இந்துமதத்தில் உள்ள அனைத்து ஆபாசக்கூட்டத்திற்கும் முடிவு வரும் என்றால் வீராங்கனையாக அவர் உள்ளே போவது சமுதாயத்துக்கு நல்லதுதான். அவர் மீது நடவடிக்கை எடுப்பதும் அவசியமானதுதான்.

லீணா இணையத்தில் எழுதியது ஆபாசம் என்று அதே இணையத்தில் உலாவரும் மற்றொரு பெண் எழுத்தாளரான தமிழச்சி என்பவர் பேசியுள்ளார். ஜீனியர் விகடனிலும் செய்தி கொடுத்துள்ளார். லீணா மணிமேகலையைக் கண்டித்துள்ளார்.

இருவருக்கும் என்ன தனிப்பட்ட தகராறோ தெரியவில்லை. சீமான் இயக்கிய தமிழ்த்திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக தமிழச்சி முயற்சித்தாராம். அதை லீணா தடுத்துவிட்டாராம். அதனால்தான் சீமான் மீதும் விமர்சனங்களை வைக்கிறாராம். இப்படி தனிப்பட்ட கோபத்தை பொதுவிசயங்களில் தமிழச்சி காட்டிஇருக்கக்கூடாது.

இதே தமிழச்சி ஏற்கனவே தமிழ்மணம் என்ற இணையதளத்தில் யோனிப் புரட்சி செய்தவர் ஆவார். பெண்குறியின் படத்தை அப்படியே படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை கிளப்பியவர். எதற்கெடுத்தாலும் பெண்குறியையும் ஆண்குறியையும் பற்றி அடிக்கடி எழுதுவதால் அந்த தமிழ்மணம் என்ற இணையதளத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர். இதே ஆபாசக் குற்றச்சாட்டு அவர் மீதும் சாட்டப்பட்டது. அய்யோ பெண்விடுதலைக்கு ஆபத்து. குரல் கொடுக்க யாரும் இல்லையா என்று தனது சொந்த ப்ளாக்கில் புலம்பித்தவித்தவர். பெரியாரின் பெண்ணியத்துக்கு ஆதரவே இல்லையா என அலறியவர். பெரியார் கருத்துக்கு தமிழ்மணம் தளம் எதிராக இருக்கிறது என மோசடிக்குற்றச்சாட்டுக்களைக் கூறியவர். தான் யோனிப்புரட்சி செய்த போது இளையசமுதாயம் கெட்டுப்போகும் என தமிழச்சிக்குத் தெரியவில்லையா? இப்போது சக தோழர் ஒருவர் இந்து இயக்கங்களால் தாக்கப்படும்போது தானும் சேர்ந்து ஒரு கல்லை எறிவது ஏன் எனத் தெரியவில்லை.

சமுதாயம் சீர்கெட்டுப் போகும் அளவுக்கு இந்துமத இலக்கியங்கள் மக்களை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கினறன. ஆபாசத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் பரப்பிவரும் இந்து இலக்கியங்களை எதிர்த்து இந்தத் தமிழச்சி என்னத்த சாதித்தார் எனத் தெரியவில்லை. பாதுகாப்பாக ஃப்ரான்ஸில் உட்கார்ந்து கொண்டு ஒரு விநாயகர் சதுர்த்தி அன்று மக்களிடம் ஒரு நோட்டிஸ் கொடுத்தாராம். இதத் தவிர வேறு ஒன்றும் செய்யாத தமிழச்சி திடீரென லீணா மணிமேகலையின் இலக்கிய ஆபாசம் பற்றி கவலப் படுவது பித்தலாட்டம்.

பாண்டிச்சேரிக்கு வந்து பாலியல் தொழிலாளர்களிடம் பேட்டி எடுத்து பந்தாவாக இணையத்தில் ஏற்றிய தமிழச்சி அப்போது இந்து இலக்கியங்களை எதிர்த்து என்ன செய்தார்? ஆபாச இலக்கியங்களை எதிர்த்து என்ன செய்தார்? பெரியார் தி.க தோழர்களோடு தனக்கு தொடர்பு இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் தமிழச்சி, சமுதாயத்துக்கு நேரடியாகவோ பெரியார் தி.க வழியாகவோ இதுவரை என்ன செய்திருக்கிறார் என பெ.தி.க தோழர்கள் தான் சொல்ல வேண்டும். சமுதாய மாற்றத்துக்காக நேரடியாக உழைப்பதில் லீணா, தமிழச்சி இருவருமே ஒன்றுமில்லைதான். ஆனால் ஒரு சரியான பெரியார்கொள்கைக்காரன் இந்த நேரத்தில் லீணாவை ஆதரிப்பான்.


 

மாகாணத்திற்கு 4பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டு கிறோம்.

பகத்சிங்

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங் காட்டாதார்கள் யாருமே இல்லை. அவரை தூக்கிலிட்ட காரியத் திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேச பக்தர் கள் என்பவர்களும், தேசீய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்ற தையும் பார்க்கின்றோம்.

இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொரு புறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப்பிரதிநிதி திரு. இர்வின் பிரபுவைப் பாராட்டு வதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என் கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல் அதை ஒரு பெரிய வெற்றி யாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறு கின்றன. இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும் படியாக தேச மகாஜனங்க ளுக்கும் கட்டளையிடுவதும், திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வது மான காரியங்களும் நடைபெற்றன.

ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் “காந்தீயம் வீழ்க” “காங்கிரஸ்அழிக” “காந்தி ஒழிக” என்கின்ற கூச்சல்களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக் கொடிகளும், அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படு வதும் சகஜமாகி விட்டன.

இவைகளை யெல்லாம் பார்க்கும் போது அரசியல் விஷய மாய் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவுமிருக்கிறது. எது எப்படி இருந்த போதிலும் திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரகக் கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே இக்கிளர்ச்சி மக்களுக்கோ. தேசத் திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோ டல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச்சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல் திரு. காந்தி யவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே பதக்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும், ஒழிப்ப தற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச்சொல்லியு மிருக்கின்றார்.

போராக்குறைக்கு அக்கம் பக்கத்து தேசத்தவர்களில் உண்மை யான சமதர்மக் கொள்கை யுடைய தேசத்தார்களும் திரு. “காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்துவிட்டார், சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே இக் காரியங்கள் செய்கின்றார். திரு. காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்” என்று ஆகாயம் முட்டக் கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆனால் நமது தேசீயவீரர்கள் தேச பக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல் பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போலவும், பந்தயங் கூறிக்கொண்டு பாறையில் முட்டிக் கொள் வது போலவும் தலை கிறுகிறுத்து கண் தெரியாமல் கூத்தாடினார் கள். அதன் பயனாய் சிறை சென்று வீரர்களாய் “வாகைமாலை சூடி” திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப் பட்டதை பார்த்து விட்டு “காந்தீயம் வீழ்க” “காங்கிர° அழிக” “காந்தி ஒழிக” என்று கூப்பாடும் போடுகின்றார் கள். இதனால்என்ன பயன் ஏற்பட்டு விடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நிற்க, நம்மைப்பொருத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொருப்பும், கவலையும் அற்ற மூடமக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கௌரவம் கிடைத்தால் போது மென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு விநாடி தோறும் வேதனைப்பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக்கொண்டிருப்பதைப் பார்க் கிலும் அவர் தன் உயிரை விட்டுமறைய நேர்ந்தது. பகத்சிங்கிற்கு மெத்த “சாந்தி” என்றும், நன்மை என்றுமே கருதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடையமுடியவில்லையே என்றுதான் கவலைப்படு கின்றோம்.

ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பது தான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காலமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சிங் கொள்கைக்கு கால மும், இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லு வோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக் கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்து விட்டது என்பதாக நம் புத்திக்கு தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமு டையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட் டோம். அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையாகும்.

நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கை கள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக் கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள் தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்துகொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்து கொண்டபடியே தான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கிய மான மனிதரென்று சொல்லமுடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லு வோம். இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராய மாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு. பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொது உடமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக் கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு. பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது :-

“பொதுஉடைமைக்கக்ட்சி அதிகாரம் பெற்று ஜனங் களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும் வரை எங்கள் யுத்தம் நடந்து கொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்து விடாது. அது பகிரங்க மாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும்” என்று குறிப்பிட்டி ருக்கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத் திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கை யுடைவர் என்றும் கருதிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்தக் கொள்கையானது எந்தச் சட்டத்தின் படியும் குற்றமாக்கக்கூடியது அல்ல வென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டியதில்லை யென்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற் பட்டு விடாது என்று உறுதி கொண்டிருக்கின்றோம்.

அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதா யிருந்தாலும் நாம் நம் மனப் பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது தனிவகுப்பினிட மாவது தனி தேசத்தானிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனிமனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டுபண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக் கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத் தன்மையுடன் இருந்து கொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக் கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டி யதில்லை என்று சொல்லுகிறோம். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத்தன்மையை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருகின்றது. தீண்டாமை ஒழிவ தாய் இருந்தால் எப்படி மேல்ஜாதி கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டுமோ அது போலவேதான் ஏழ்மைத் தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித்தன்மை கூலிக்காரத்தன்மை ஒழிந்து தானாக வேண்டும்.

ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடு வது தான் சமதர்மத்தன்மை பொது உடமைத்தன்மை என்பவை களே ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கை கள் தான் திரு. பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக் கொள்கைகளை நியாயமானவையென்றும் அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிர்ஸ் ஒழிக! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே, காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது. திரு. காந்தியவர்கள் என்றையத்தினம் கடவுள் தான் தன்னை நடத்துகின்றார் என்றும் வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலான தென்றும் எல்லாம் கடவுள்செயல் என்றும் சொன் னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாச மில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட் டோம். ஆனால் அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தீயம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள்.

இது நமது கொள்கை களுக்கு ஒரு பெரிய வெற்றியேயாகும். திரு. பகத்சிங் தூக்கி லிடப் பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றி யும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று கூடச் சொல்லு வோம். சும்மா தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப்பட்டு செத்துச் சாம்பலாகி இருக்கவேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு, ஏன் உலகமக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத் தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி பகத்சிங்கை மனமார, வாயார, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்!! பாராட்டுகின்றோம்!!!

இதே சமயத் தில் நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மை யான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டு கிறோம்.

தந்தை பெரியார் - 29.03.1931